ETV Bharat / state

ரஜினிகாந்த் யாருடனும் அரசியல் பேசலாம்.. ஆனால் ஆளுநர்...? - தொல்.திருமாவளவன் - 18 பேர் இடை நீக்கம்

ரஜினிகாந்த் யாருடனும் அரசியல் பேசலாம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் யாருடனும் அரசியல் பேசலாம்.. ஆனால் கவர்னர்? - தொல்.திருமாவளவன் விமர்சனம்!

author img

By

Published : Aug 10, 2022, 10:24 AM IST

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் எதிர்கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடியதாக, ஜனநாயகத்தை நசுக்க கூடியதாக இருந்தது. 12 ஆம் தேதி வரை கூட்ட தொடர் நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள்.

பாஜக அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவையில் எதேச்சதிகாரங்கள் சான்றாக இருந்தன. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தபோது, எதிர்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக திரும்பப் பெற்றனர். மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்க கூடிய கூட்டத் தொடராக இருந்தது. எதிர்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டனர். பீகாரில் பாஜகவிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையிலும், தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க ஒரு அச்சாரமாக இருக்க கூடிய வகையில் நிதிஷ் குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்று சிறப்பாக உள்ளது.

ரஜினிகாந்த் யாருடனும் அரசியல் பேசலாம்.. ஆனால் கவர்னர்? - தொல்.திருமாவளவன் விமர்சனம்!

அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக இது விளங்குகிறது. இந்தியா முழுவதும் இதுபோல் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க வழி காட்டும் நிலைப்பாடாக அமைய வேண்டும்.

ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கலாம். யாருடனும் அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால் கவர்னர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருடைய அரசியல் கடமை மாநில, மத்திய அரசுகளுக்கு இணைப்ப உருவாக்க வேண்டியதுதான்.

ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்காரராக முழு நேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். கவர்னரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்ல, தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது. மின்சார திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க: Video: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.