ETV Bharat / state

'தலைவர் 170' ஷூட்டிற்கிற்கு கேரளா சென்ற சூப்பர் ஸ்டாருக்கு உற்சாக வரவேற்பு! - ராணா டகுபதி

Thalaivar 170 Movie: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத 'தலைவர் 170' பட ஷூட்டிங்கிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Thalaivar 170
தலைவர் 170
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 2:05 PM IST

Updated : Oct 3, 2023, 10:52 PM IST

சென்னை: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் புதிதாக உருவாக உள்ள திரைப்படம், “தலைவர் 170”. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், “திருவனந்தபுரத்திற்கு 170வது படத்தின் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெயர் என்ன என்பது தாமதமாக தெரியும். ஜெயிலர் படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி அடைந்து உள்ளது. 170வது படம் ஒரு நல்ல பொழுதுபோக்கான படமாக இருக்கும்” என்று கூறினார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் “தலைவர் 170” படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

முன்னதாக, லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார். இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து உள்ளார். இந்த படம் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியானது.

முன்னதாக, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். மேலும், இப்படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.

இதனையடுத்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஜெயிலர் படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார் மற்றும் காசோலையினை பரிசாக வழங்கினார். அது மட்டுமல்லாமல், ஜெயிலர் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தங்கக் காசுகளை தயாநிதி மாறன் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் சென்றடைந்த ரஜினி: இந்நிலையில் மதியம் 1.20 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைந்த ரஜினிகாந்தை வரவேற்க காலையில் இருந்து காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் படப்பிடிப்பிற்கு திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளயானி வேளாண் கல்லூரி மற்றும் சங்குமுகம் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 500க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை!

Last Updated : Oct 3, 2023, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.