சென்னை: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'தலைவர் 170'. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இன்று (டிச.12) நடிகர் ரஜினிகாந்த்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு,'தலைவர் 170' படத்திற்கு 'வேட்டையன்' எனத் தலைப்பை அறிமுகப்படுத்தும் வீடியோ ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலாக உள்ளார் என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோவில் குறி வெச்சா இரை விழனும் என்று ரஜினிகாந்த் சொல்லும் வசனம் வைரலாகி வருகிறது.
-
The wait is over! ⌛ Presenting the title of #Thalaivar170 🕴🏻 - VETTAIYAN 🕶️
— Lyca Productions (@LycaProductions) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️ https://t.co/lzzKA7B0lA
Unleashing Thalaivar's power, style & swag on his special day! 💥#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/6wD1c5Zehw
">The wait is over! ⌛ Presenting the title of #Thalaivar170 🕴🏻 - VETTAIYAN 🕶️
— Lyca Productions (@LycaProductions) December 12, 2023
▶️ https://t.co/lzzKA7B0lA
Unleashing Thalaivar's power, style & swag on his special day! 💥#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/6wD1c5ZehwThe wait is over! ⌛ Presenting the title of #Thalaivar170 🕴🏻 - VETTAIYAN 🕶️
— Lyca Productions (@LycaProductions) December 12, 2023
▶️ https://t.co/lzzKA7B0lA
Unleashing Thalaivar's power, style & swag on his special day! 💥#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/6wD1c5Zehw
முன்னதாக, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த சில படங்கள் ரஜினிகாந்த்திற்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில், ஜெயிலர் படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தந்தது. ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த், ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து "வேட்டையன்" படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 40 வருடங்கள் மேலாக மக்கள் மனதை ஆளும் கருப்பு ஹீரோ, ஸ்டைல் சாம்ராட் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்..!