ETV Bharat / state

'நாட்டில் அமைதியை நிலைநாட்ட தகுதிக்குட்பட்டதைச் செய்யத் தயார்!' - ரஜினிகாந்த்

சென்னை: தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையினருடனா சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள ரஜினிகாந்த், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தன் தகுதிக்குட்பட்டதைச் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

rajini tweet about Tamil Nadu Jamathul Ulama Sabai delegation meeting

author img

By

Published : Mar 1, 2020, 11:40 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், டெல்லி வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்ததைக் கண்டித்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டால் தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று உறுதியளித்திருந்தார். மேலும் டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் விமர்சித்திருந்தார்.

இத்தகைய பரபரப்பான சூழலில் ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஆலோசித்ததாகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகப் பேசியதால் அவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மதகுருமார்கள் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் காஜா மொயீனுத்தீன் பாகவி, அன்வர் பாதுஷாஹ் உலவி, முஜீபூர் ரஹ்மான் மஸ்லஹி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி ஆகிய ஐந்து பேரும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரஜினியுடன் கலந்துரையாடினர்.

அனைவரும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இன்முகத்தோடு திரும்பினர். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தன்னால் இயன்றதை செய்வதாக ரஜினி உறுதியளித்ததாகவும் குருமார்கள் கூறினர்.

ரஜினி ட்வீட்
ரஜினி ட்வீட்

தற்போது ரஜினிகாந்த் உலமா சபை மதகுருமார்களுடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், அன்பும், ஒற்றுமையும் ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை தான் ஆமோதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தன் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி மக்களின் அச்சத்தைப் போக்கி அமைதியை மீட்டெடுக்க முயற்சியெடுப்பார் - காஜா மொயீனுத்தீன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.