ETV Bharat / state

ரஜினி மக்களின் அச்சத்தைப் போக்கி அமைதியை மீட்டெடுக்க முயற்சியெடுப்பார் - காஜா மொயீனுத்தீன்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கி நாட்டில் அமைதியை மீட்டெடுக்க தன்னால் ஆனதை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாக ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் காஜா மொயீனுத்தீன் பாகவி கூறியுள்ளார்.

Rajini
Rajini
author img

By

Published : Mar 1, 2020, 3:05 PM IST

தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் டெல்லி கலவரத்தைக் கண்டித்தும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்று கூறினார். மேலும், டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம்கொண்டு அடக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.

ரஜினியை சந்தித்த ஜமாஅத்துல் உலமா சபை மதகுருமார்கள்

இதனையடுத்து இன்று ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மதகுருமார்கள் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் காஜா மொயீனுத்தீன் பாகவி, அன்வர் பாதுஷாஹ் உலவி, முஜீபூர் ரஹ்மான் மஸ்லஹி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி ஆகிய ஐந்து பேரும் நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். முன்னதாக பிப்ரவரி 5ஆம் தேதி ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் இந்த விஷயத்தில் மதகுருமார்கள் தூண்டிவிடப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்குத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வருத்தம் தெரிவித்ததோடு இது குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர தயாராக இருப்பதாகவும் அறிக்கையை வெளியிட்டனர். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில்வந்து சந்திக்கும்படி அழைப்புவிடுத்தார்.

Rajini Muslim

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் காஜா மொயீனுத்தீன் பாகவி, இன்றைய சந்திப்பு கன்னியமான முறையில் அமைந்ததாகவும், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கி நாட்டில் அமைதியை மீட்டெடுக்க தன்னால் ஆனதை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அச்சபையின் செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி, ரஜினி கூறியதுபோல மதகுருமார்கள் தூண்டிவிடப்படவில்லை எனவும், அதுகுறித்து அவரிடம் உண்மைத்தன்மையை தெளிவாக விளக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நாங்கள் எடுத்துரைத்த அனைத்தையும் நடிகர் ரஜினிகாந்த் புரிந்துகொண்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.