ETV Bharat / state

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - Rainfall in Southern Districts of tamilnadu

சென்னை: அடுத்த இரண்டு நாள்களுக்கு சென்னை உள்பட நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rainfall in Southern Districts
author img

By

Published : Oct 21, 2019, 4:17 PM IST

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தற்பொழுது தென் தமிழ்நாடு, குமரிக் கடலை ஒட்டியுள்ள பகுதியின் வளிமண்டலத்திலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியின் வளிமண்டலத்திலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவிவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 14 செ.மீ. மழையும் பெரியநாயக்கன்பாளையத்தில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்துவரும் இரு தினங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வட தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகளுக்கு 21, 22 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். சென்னை, அதன் புறநகரைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மழை தொடரக்கூடும். அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.

நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் மிக கன மழைக்கான வாய்ப்புள்ளது " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - நாங்குநேரி அதிமுக வேட்பாளர்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 21.10.19

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்...

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தற்பொழுது தென் தமிழகம் மற்றும் குமரிக் கடலை ஒட்டியுள்ள பகுதியின் வளிமண்டலத்திலும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உள்ள வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியின் வளிமண்டலத்திலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 14 செ.மீ மழையும், பெரியநாயக்கன்பாளையத்தில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் வட தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும். மேலும், டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

தென் மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதிகளுக்கு 21, 22 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு மழை தொடரக்கூடும். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்புக்கு இணையாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் மிக கன மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்...

tn_che_03_metrology_press_meet_by_balachandran_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.