தமிழ்நாடு கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் (1.5 முதல் 3.6 கிலோமீட்டர் உயரம்வரை) வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கர்நாடகாவிலிருந்து தென் கேரளம் வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை) வளிமண்டல சுழற்சி காரணமாகவும்
ஏப்ரல் 28, 29, 30, மே 1, மே 2 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழ்நாடு உள் மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ., மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கரூர் மாவட்டம் அணைப்பாளயம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பெய்தது.
இதையும் படிங்க: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை: காதல் விவகாரமா?