இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தென் தமிழ்நாட்டில் நிலப்பரப்பில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது, அதேபோல் தெற்கு உள் கர்நாடக பகுதியிலும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது, இந்த இரண்டு மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வெப்பசலனம் காரணமாகவும், மேற்கு உள் தமிழ்நாடு மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 5 செ.மீ மழையும், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மேலும், தேனி பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 3 செ.மீ மழை பதிவானது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகப்படியாக 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.