சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 7) நீலகிரி, கோயமுத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
![மூன்று மாவட்டங்களில் கனமழை கனமழை மழை வானிலை அறிக்கை தமிழ்நாட்டின் மழை நிலவரம் வானிலை நிலவம் வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம் rain rain update heavy rain tamilnadu rain status rain update Chennai Meteorological Center Meteorological Center weather report chennai climate chennai news chennai latest news rain update by Chennai Meteorological Center](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12700866_rain1.jpg)
ஆகஸ்ட் 8: கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும்.
திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 9: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 10: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 11: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
![மூன்று மாவட்டங்களில் கனமழை கனமழை மழை வானிலை அறிக்கை தமிழ்நாட்டின் மழை நிலவரம் வானிலை நிலவம் வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம் rain rain update heavy rain tamilnadu rain status rain update Chennai Meteorological Center Meteorological Center weather report chennai climate chennai news chennai latest news rain update by Chennai Meteorological Center](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12700866_rain3.jpg)
அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 7) தென்கிழக்கு இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 7) முதல் ஆகஸ்ட் 10 வரை தென் மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
![மூன்று மாவட்டங்களில் கனமழை கனமழை மழை வானிலை அறிக்கை தமிழ்நாட்டின் மழை நிலவரம் வானிலை நிலவம் வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம் rain rain update heavy rain tamilnadu rain status rain update Chennai Meteorological Center Meteorological Center weather report chennai climate chennai news chennai latest news rain update by Chennai Meteorological Center](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12700866_rain.jpg)
இதனைத் தொடர்ந்து இன்றுமுதல் (ஆகஸ்ட் 7) ஆகஸ்ட் 11 வரை கேரள கடலோரப் பகுதியை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரள கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 38,628 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு