ETV Bharat / state

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: மேற்கு மாவட்டங்களில் மழை!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்பது குறித்த விளக்கம்.

author img

By

Published : May 5, 2021, 7:07 PM IST

Rain details in tamilnadu
Rain details in tamilnadu

குமரிக்கடல் பகுதிகளில் 5.8 கிலோமீட்டர் உயரம்வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (மே 5) மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 6, 7, 8, 9 ஆகிய தேதிகளீல், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடுவரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலைவரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடுவரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலைவரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்): சுராலகோடு (கன்னியாகுமரி), சங்கரன்கோயில் (தென்காசி) தலா 7, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 6, திண்டுக்கல், சிவலோகம் (கன்னியாகுமரி), தாராபுரம் (திருப்பூர்), மணல்மேடு (நாகப்பட்டினம்) தலா 4, சூலூர் (கோவை), ராசிபுரம் (நாமக்கல்), குடவாசல் (திருவாரூர்), காட்டுமன்னார் கோயில் (கடலூர்) தலா 3, தேக்கடி (தேனி), கொடைக்கானல், சங்கரிதுர்க் (சேலம்), வத்திராயிருப்பு (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கரூர் பரமத்தி தலா 2 .மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.