சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று (ஜுன்.04) காலை சிறப்பு ரயில் ஒன்று வந்தது. அப்போது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவநேசன் தலைமையிலான காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
அப்போது ரயிலில், எஸ்10 பெட்டியில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் மீது ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் சந்தேகம் அடைந்து சோதனை நடத்தினர். அவர் வைத்திருந்த பையில், கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் மொத்தம் 35,30,000 ரூபாய் பணம் இருந்தது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மஞ்சுமர்த்தி சுப்பாராவ் என்பதும், அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் அவரையும் வருமான வரித்துறையினரி0டம் ஒப்படைத்தனர். ஏற்கனவே கடந்த 1ஆம் தேதி இதே சிறப்பு ரயிலில் குண்டூரில் இருந்து வந்த சந்திரசேகர் என்பவர் உடலில் 28 லட்சம் ரூபாய் கட்டிக்கொண்டு வந்து ரயில்வே பாதுகாப்பு காவலர்களிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'