சென்னை: சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் (DAVC) இன்று (அக்டோபர் 18) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், வளசரவாக்கம் பெத்தானியா நகரிலுள்ள விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற அலுவலர் சீனிவாசனின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது சீனிவாசன் சுகாதாரத் துறையில் அலுவலராகப் பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்த விஜயபாஸ்கர்: எஃப்.ஐ.ஆரில் தகவல்