ETV Bharat / state

நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல் - தமிழ்நாட்டை நோக்கி திரும்பும் தேசிய தலைவர்களின் கவனம்

author img

By

Published : Jan 13, 2021, 4:47 AM IST

ஜே.பி.நட்டா தமிழ்நாடு வரும் அதே நாள் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். இதனை தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதற்கு பழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளார். தேர்தல் சமயம் என்பதால் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்வையிட ஜனவரி 14 ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வர உள்ளார். அதே போல் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வர உள்ளது அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று நேரில் ஆழைப்பு விடுக்க உள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தேசிய தலைவர்களின் கவனம் தமிழ்நாடு நோக்கி திரும்பியுள்ளது.

கடந்த 40 வருடங்களாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக கட்சிகள் அதிமுக, திமுக கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருவது வழக்கம். மாபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெறும் 2021 சட்டப்பேரவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

தேசிய அளவில் காங்கிரஸ் வலுவிழந்து இருப்பதால் தமிழ்நாட்டில் திமுக-விடம் தொகுதி பங்கீட்டை உரிமையுடன் கேட்கமுடியாது நிலையில் உள்ளது. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் வருகையை எதிர்நோக்கி இருந்த பாஜக-விற்கு கிடைத்த ஏமாற்றத்தை தொடர்ந்து நேற்று தான் முதல் முறையாக அதிமுக தலைமையில் பாஜக இருக்கும், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக மாநில அமைச்சர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், முக்கிய நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு வலுசேர்க்கும் வகையில் மாநில கட்சிகளின் கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு நோக்கி வர உள்ளனர். ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 'துக்ளக்' ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வரும் ஜே.பி. நட்டா கட்சியின் சமத்துவ பொங்கல் நிகழ்விலும் பங்கேற்க உள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

தேசிய தலைவர்களால் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றபொழிதிலும் தேசிய தலைவர்களின் வருகை அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழர்களை கவருவதற்காக தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டை தேசிய கட்சிகள் முன்வைக்கின்றனர்.

இதை பற்றி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் பேராசிரியர் திருநாவுக்கரசு கூறுகையில், "ஜே.பி நட்டா யார் என்று பாஜக கட்சியினருக்கு பலருக்கு தெரியாது. நேரு குடும்பம் என்ற மரியாதை ராகுல் காந்திக்கு உள்ளதே தவிர மக்கள் தேசிய தலைவர்கள் வருகிறார்கள் என்று வாக்கு அளிப்பார்களா என்பது சந்தேகம் தான்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பாஜக முதல் முறையாக வேல் யாத்திரை, பொங்கல் விழா கொண்டாட்டம் போன்றவை கையில் எடுத்து அவர்கள் மேல் இருக்கும் வட நாட்டு கட்சி என்ற பெயரை மாற்றி கொள்ள நினைக்கிறார்கள். பாஜக கட்சியும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி தற்போது செய்வது தேர்தல் குறியீட்டு அரசியல். காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் என்ற தலைமை உதவுகிறது, அது பாஜக கட்சிக்கு இல்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி, ஜே.பி.நட்டா வருகை வாக்குகளை தராது. ஆனால் தமிழ்நாட்டில் செண்டிமண்ட் வேலை செய்யும் என்பதால் தாங்கள் உள்ளூர்காரர்கள் தான் என்பது போல் காட்டி கொள்ள இது போன்று தேசிய கட்சிகள் செய்கின்றது. திராவிட கட்சிகள் பலமாக இருப்பதால் அதையே பாஜக கையில் எடுத்துள்ளது. இதை முன்னர் காங்கிரஸ் செய்துள்ளது.

உள்ளூர் அரசியல் மக்களுடன் இணைந்தது செயல்பட்டால் தான் இங்கு வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்ததால் இது போன்று செய்கின்றனர்.
ஆனால் அவர்கள் நம்பிக்கை உண்மையில் பலன் தருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் இதை பற்றி பேசிய போது, "தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டிற்கு வரும் தேசிய தலைவர்களால் நிச்சியமாக தேர்தல் முடிவுகளில் எந்த தாக்கமும் இருக்காது. பேசும் பொருளாக மாறும் அவ்வளவு தான்.

எடப்பாடி கட் அவுட்
எடப்பாடி கட் அவுட்

ஜே.பி.நட்டாவாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி ஜல்லிக்கட்டை பார்பதால் மக்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள், தமிழ்நாட்டிற்கு என்ன திட்டம் கொண்டு வந்தார்கள் என்பதை தான் மக்கள் பார்பார்கள்.

பரப்புரை களத்தில் ஸ்டாலின்
பரப்புரை களத்தில் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் அப்போது பிரதமர் மோடி மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். தற்போது வரை ஒரு செங்கல் கூட அங்கு இல்லை. இதை தான் மதுரை மக்கள் கவனிப்பார்கள் என தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.