ETV Bharat / state

6 முதல் 9 வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு திறனறிவுத் தேர்வு! பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு என்ன? - சென்னை மாவட்ட செய்தி

தமிழ்நாட்டில் மாநிலப் பாடதிட்டத்தில் 6 முதல் 9 வகுப்பு வரையில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் காலாண்டுத் தேர்வில் பொது கேள்வித்தாள் மூலம் திறனறிவுத் தேர்வு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 4:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகான கேள்வித்தாள் மாவட்ட அளவில் தயார் செய்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் பொதுத் தேர்விற்கான கேள்வித்தாள் வடிவமைப்பில் தயார் செய்யப்பட்டு தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படும்.

அதே போல் பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை சோதனை செய்யவும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் தனியாக அடைவுத்திறன் தேர்வு நடத்தப்படும். இந்த நிலையில் சமகரசிக் ஷா மாநில திட்ட இயக்குனர் காலண்டுத் தேர்வு மற்றும் அடைவுத் திறன் தேர்வினை நடத்துவதற்கான கால அட்டவணையையும், வழிகாட்டுதல் முறைகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்தத் தேர்வினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும் எனவும் அதில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அடைவுத் திறன், காலாண்டுத் தேர்விற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 10ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில், மொழிப்பாடம், விருப்ப மாெழிப்பாடம், ஆங்கிலம், உடற்கல்வியியல், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகியப் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

காலாண்டுத் தேர்விற்கான கேள்வித்தாள் பதிவிறக்கம் செய்வதற்கு http//exam.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் அரசு, அரசு நிதியுதவிப் பெறும் பள்ளிகளின் எமிஸ் கணக்கு வழியாகவோ, அல்லது பள்ளியின் UDISE பயன்படுத்தியோ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

ஒவ்வொருத் தேர்வுக்கும் முதல் நாள் மதியம் 2 மணி முதல் கேள்வித்தாள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தேர்வு முடிந்தப் பின்னர் feedback ஒவ்வொரு நாளும் பின்னுட்டங்களை பதிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியரின் எமிஸ், பள்ளியின் UDISE பதிவெண் ஆகியவற்றுள் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். feedback பதிவு செய்தால் மட்டுமே அடுத்த நாள் கேள்வித்தாள் பதிவிறக்கம் செய்ய முடியும்.

கேள்வித்தாளில் பள்ளியின் UDISE எண் பதிவு செய்யப்பட்டு இருக்கும். கேள்வித்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் 14417 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் தொடர்பில்லாத வேறொரு பள்ளியின் கணக்கில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட கேள்வித்தாள் பயன்படுத்தக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வரும் 19 முதல் 27 முடிய முதல் பருவத்திற்கான மாநில அளவிலான பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை மதிப்பீட்டுப் புலம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் கற்றல் விளைவுகள் மற்றும் திறன் வழி மதிப்பீட்டு வினாத்தாள் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாளை தேர்வுக்கு முந்தைய நாளில் பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கற்றல் விளைவு மற்றும் திறன் வழி மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 29 முதல் செப்டம்பர் 1 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாநில மதிப்பீட்டு புலம் மூலம் உருவாக்கப்பட்ட வினாத்தாள்களைக் கொண்டு மாதிரி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாதிரித் தேர்வுக்காக மாநில மதிப்பீட்டு புலம் மூலமாக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களில் தவறான வினாக்களும் விடைகளும் இடம் பெற்றிருந்தது.

மாணவர்களின் கற்றல் அடைவுகளையும் விளைவுகளையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்நோக்கம் வரவேற்கத்தக்கது. இருந்தாலும் மாநில அளவில் ஒரே வினாத்தாள் தயாரித்து பொதுத் தேர்வு நடத்துவது தொடக்கக் கல்வி குழந்தைகளுக்கான மதிப்பீட்டு நெறிகளுக்கு எதிரானது.

மேலும், 6 முதல் 9 வகுப்புகளுக்கு அறிவியல் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா, சிறுவர் திரைப்படம் ஆகிய மன்றச் செயல்பாடுகளுக்கும் மற்றும் போட்டிகள் நடத்துவதற்கும் வாரத்தில் இரண்டு பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் பத்து வகையான போட்டிகளை பள்ளிகளில் நடத்துவதோடு மாவட்ட மற்றும் வட்டார அளவிலும் குழந்தைகளை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பள்ளியின் வழக்கமான செயல்பாடுகளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை இதற்காக செலவிட வேண்டி உள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கல்வியில் மேலாண்மை தகவல் மையத்தின் (EMIS) இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளில் பாடத்திட்டம் சார்ந்த செயல்பாடுகளை முழுமையாக நிறைவாக மேற்கொள்வதற்கு போதுமான சூழல் இல்லாத நிலையில் மன்றச் செயல்பாடுகள் என்ற பெயரில் பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளையும் மேற்கொள்வதால் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் பெரிய அளவில் இடர்பாடுகள் உருவாகியுள்ளன. கற்றல் கற்பித்தல் பணிகளை ஆசிரியர்கள் போதுமான நேரமின்மையால் அரைகுறையாகவே மேற்கொள்ளும் சூழல் உள்ளது.

பாடத்திட்டம் சாரா செயல்பாடுகளில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் அடிப்படைத் திறன்களை அடைவதில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகளில் பள்ளி வேலை நாட்களில் பாடத்திட்டம் சார்ந்த செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். ஆனாலும் விடுமுறை நாட்களில் கூட தனியார் பள்ளிகள் நடக்கின்றன. கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் சார்ந்த கல்விச் செயல்பாடுகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகளில் இப்படிப்பட்ட சூழல்கள் இருக்கும் நிலையில் மாநில அளவில் கற்றல் விளைவு மற்றும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடத்துவது பொருத்தமற்றது.

கற்றல் விளைவுகள் மற்றும் திறன் வழி மதிப்பிட்டிற்காக நடத்தப்பட்ட மாதிரி தேர்வு வினாத்தாள்களில் இடம் பெற்றிருந்த வினாக்கள் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நிகராக இருந்தன. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இரண்டு அல்லது மூன்று பாடங்களுக்கான ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டித் தேர்வுகளுக்கு இணையான தேர்வுகளுக்கு குழந்தைகளைத் தயார் செய்வதற்கு அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர்களை நியமித்து கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் பணிகள் பள்ளிகளில் நடைபெற்றாக வேண்டும். பாடத்திட்டம் சாரா செயல்பாடுகளால் பள்ளிகளில் வழக்கமான கற்றல் கற்பித்தல் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் கற்றல் விளைவுகள் மற்றும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நல்ல முயற்சியாக அமையாது என கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநராக பதிவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு! ஆளுநர் ஆர்.என்.ரவியின் கதை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.