ETV Bharat / state

அரசு உதவியுடன் தனியார் பள்ளியில் படித்தவருக்கு 7.5% இல்லையாம்; கானலான மருத்துவ கனவு! - கறம்பக்குடி

10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அரசின் உதவியுடன் தனியார் பள்ளியில் 11,12ஆம் வகுப்பு படித்த புதுக்கோட்டை மாணவருக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இடம் அளிக்காததால் அம்மாணவரின் மருத்துவக் கனவு கானலாகியுள்ளது.

pudhukottai student medical dream abolished
அரசு உதவியுடன் தனியார் பள்ளியில் படித்தவருக்கு 7.5% இல்லையாம்; கானலான மருத்துவ கனவு
author img

By

Published : Dec 7, 2020, 8:13 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா தீத்தான்விடுதி கிராமத்தில் வசித்து வரும் சேகர்- வாசுகி தம்பதியினரின் மகன் பரிமள ஈஸ்வரன். இவர், கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றார். இதனையடுத்து இவருக்கு, உணவு, தங்கும் வசதி, கல்விக்கட்டணம் போன்ற அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று தனியார் பள்ளியில் பரிமள ஈஸ்வரன் 11, 12ஆம் வகுப்பு சேர்வதற்கான ஆணை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதன்படி, பரிமள ஈஸ்வரன் புதுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளியில் 11,12ஆம் வகுப்பில் படித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 600க்கு 542 மதிப்பெண்களும், அந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 197 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மருத்துவர் கனவோடு இருந்த மாணவர், தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடியே பயிற்சி எடுத்து இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 346 மதிப்பெண்கள் பெற்றார்.

அரசு உதவியுடன் தனியார் பள்ளியில் படித்தவருக்கு 7.5% இல்லையாம்; கானலான மருத்துவ கனவு

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு இட ஒதுக்கீட்டிற்கும், தமிழ்நாடு பொது மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டிற்கும் விண்ணப்பித்த இவருக்கு மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பில்லாமல் உள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் படித்து, அரசு ஆணை மூலம், அரசு செலவில் 11,12ஆம் வகுப்பினை தனியார் பள்ளியில் படித்த அவரை அரசு பள்ளி மாணவராக கருதி 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என மாணவரின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு செலவில், தனியார் பள்ளியில் 11,12ஆம் வகுப்பு படித்த இவரை, அரசுப் பள்ளியில் படித்த மாணவராக கருதமுடியாது என மருத்துவத் துறை சார்பில் கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவரை அரசு தனது சொந்த செலவில் தனியார் பள்ளியில் படிக்க வைத்ததாகவும், அவரை அரசுப்பள்ளி மாணவராகவே கருதி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்யவேண்டும் என்றும் மாணவனின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக கல்வித்துறை மற்றும் மருத்துவத் துறை உயர் அலுவலர்களிடம் கேட்டபோது, இது தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரச்னை, ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் 10 ஆதிதிராவிடர் நலப்பிரிவு மாணவர்களுக்கு அரசு நிதியுதவி செய்து தனியார் பள்ளியில் படிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசே மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நிதியுதவி அளித்து தனியார் பள்ளியில் படிக்க வைக்கும்போது, அந்த மாணவர்களையும், அரசுப் பள்ளி மாணவர்களாக கருதி 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மருத்துவ இடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதையும் படிங்க: சமூக நீதி ஜெயிக்கும் வரலாறு - 'நீட்' தேர்வில் வென்ற சாமானிய மாணவியின் கதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.