கரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
அவ்வாறு முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வெளியே செல்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதி அட்டை பறிமுதல் செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
அதன் பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகே அவை திரும்ப வழங்கப்படும். இதனால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்!