ETV Bharat / state

புற்றுநோய் சிகிச்சை: அரசுப் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!

author img

By

Published : Jan 13, 2020, 8:57 PM IST

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்களுக்கு 10 நாள்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Public employees suffering from cancer will be given special contingency leave with 10 days with payment
Public employees suffering from cancer will be given special contingency leave with 10 days with payment

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் நலனை கருத்தில்கொண்டு கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைக்குச் செல்ல வசதியாக சம்பளத்துடன் கூடிய 10 நாள்கள் விடுமுறை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் இதனை வெளியிட்டார்.

அதன்படி புற்றுநோய் சிகிச்சைக்குச் செல்லும் அரசுப் பணியாளர்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன், சிகிச்சைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 10 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கப்படும் என்றும் இதற்கு மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மைச் செயலர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பகைக்கு வயது ஒன்று' - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்

Intro:Body:புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசு பணியாளர்களுக்கு 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சைக்கு செல்ல வசதியாக சம்பளத்துடன் கூடிய 10 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி புற்றுநோய் சிகிச்சைக்கு செல்லும் அரசு பணியாளர்க்ளுக்கு தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன் சிகிச்சைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 10 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கப்படும். இதற்கு மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மை செயலர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.