சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் கொச்சையாகப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்ட பப்ஜி மதன் புழல் சிறையில் உள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பப்ஜி மதன் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக இவர் மீது பல புகார்கள் வந்ததால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிறைக்குள் பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக அவரது மனைவி கிருத்திகா சிறைக்குள் பணிபுரியும் சிறைத் துறையினரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறைத்துறை டிஜஜி தலைமையில் விசாரணை குழு அமைப்பு அமைக்கப்பட்டது.
உடனடி நடவடிக்கை- பணியிடை நீக்கம்
விசாரணையில் சிறை உதவி ஜெய்லர் செல்வம் குற்றம் செய்தது உறுதிப்படுத்தப்பட்து. இதனையடுத்து காவல் துறையினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் சொகுசாக இருப்பதற்காகச் சிறைத் துறை அலுவலரிடம் பப்ஜி மதனின் மனைவி கையூட்டு தருவதாகப் பேசிய ஆடியோ வைரலானதை தொடர்ந்து உதவி ஜெயிலர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க:சிறையில் சொகுசு கேட்கும் பப்ஜி மதன்: மனைவியிடம் கையூட்டு கேட்ட அலுவலர் - வைரலாகும் ஆடியோ!