நடிகர் ரஜினி காந்த் 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து தற்போது முருகதாஸின் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்துவருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளியான பிரகாஷ், இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 100 முறை ரத்த தானம் செய்துள்ளார். இவரது இந்த முயற்சி தற்போது உலக சாதனை படைத்துள்ளது.
பிரகாஷின் இந்த முயற்சியை ரஜனிகாந்த் நேரில் அழைத்துப் பாரட்டியுள்ளார். இதனையடுத்து பிரகாஷ் கூறியதாவது, ரஜினியை சந்தித்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். அவருடையை வாழ்த்து என்னை மேலும் இது போன்ற சேவைகளை செய்ய தூண்டுகோலாக இருக்கிறது என்று தெரிவித்தார்.