சென்னை: புளியந்தோப்பில் குடிசைப் பகுதி மக்களுக்கென புதிதாக கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டன.
ஆனால், தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிரும் வகையில் கட்டடம் தரமற்று காணப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்த விவாதங்கள் பேசுபொருள் ஆகின.
இந்த நிலையில் குடியிருப்புகள் தரமற்றதாக இருந்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஐஐடி நிபுணர்கள் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இரு அலுவலர்கள் சஸ்பெண்ட்; சரிசெய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணை
மேலும், தரமற்ற குடியுருப்புகளை சிமெண்ட் பூச்சு கலவை மூலம் சரிசெய்யவும், கழிவறைகளில் பழைய பீங்கான்களை பெயர்த்து எடுத்து, புதிய பீங்கான்கள் பதிக்கவும்; பணிகளை 45 நாள்களுக்குள் முடிக்கவும் அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் இக்கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பிஎஸ்டி நிறுவனம், தற்போது கட்டடத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக சரிசெய்யப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
இக்கட்டடத்தைக் கட்டிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகிய இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு