ETV Bharat / state

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர், பேராசிரியர்கள் நியமிக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்ட தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Yoga and Naturopathy College  College of Yoga and Naturopathy  principals and professors to the College of Yoga and Naturopathy  Prohibition on appointing principals and professors to the College of Yoga and Naturopathy  chennai news  chennai latest news  chennai high court  சென்னை உயர் நீதிமன்றம்  யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி  யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பேராசிரியர்கள் நியமிக்க தடை  முதல்வர் பேராசிரியர்கள் நியமிக்க தடை
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 9, 2021, 12:01 PM IST

சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக தற்காலிக விதிகளை வகுத்து கடந்த ஜூலை 27ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதில், இப்பதவிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்து செய்யக் கோரி அகில இந்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பிலும், ஒரு அரசு மருத்துவர், மருத்துவ மேற்படிப்பு மருத்துவர் ஒருவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கால அவகாசம்

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, 2018ம் ஆண்டுக்கு பின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் உள்ளதாகவும், பலர் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த தற்காலிக விதிகள், ஆசிரியர் பணிக்கு மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழு, விதிகளுக்கு முரணாக இருப்பதால், இந்த விதிகளின் அடிப்படையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வரை நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், வழக்கு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று நவம்பர் 10ஆம் தேதிக்குள் அரசின் விளக்கத்தை தெரிவிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு - கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.