ETV Bharat / state

வடகலை தென்கலை பிரச்னை - ‘கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை’

சென்னை: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் பிரச்னை தொடர்பாக தென்கலை பிரிவினர் தொடர்ந்த வழக்கில், கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வடகலை தென்கலை பிரச்னை
வடகலை தென்கலை பிரச்னை
author img

By

Published : Jan 24, 2020, 8:21 PM IST

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் ஆழ்வார்கள் தமிழில் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடவேண்டும் என தென்கலை வைணவர்களும், சமஸ்கிருத வேதங்களை பாராயணம் செய்ய வேண்டும் என வடகலை வைணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், இரு தரப்பினரும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு பிணையப் பத்திரம் செலுத்த வேண்டும் என காஞ்சிபுரம் சப் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தென்கலை வைணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சப் கலெக்டரின் உத்தரவால் இரு தரப்பினரும், பிரபந்தம் பாடுவதிலும், வேத பாராயணம் செய்வதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

யார் பெரியவர் என இரு தரப்பினரும் காட்டிக் கொள்வதால் பக்தர்கள் அசௌகரியத்துக்கு ஆளாவதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி, கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை எனக் கூறி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, வடகலை வைணவர்களுக்கும், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளருக்கும், தேவராஜ ஸ்வாமி கோயில் செயல் அதிகாரிக்கும் உத்தரவிட்டார்.

Intro:Body:காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் பிரச்னை தொடர்பாக தென்கலை பிரிவினர் தொடர்ந்த வழக்கில், கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார்கள் தமிழில் எழுதிய 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தை பாடவேண்டும் என, தென்கலை வைணவர்களும், சமஸ்கிருத வேதங்களை பாராயணம் செய்ய வேண்டும் என வடகலை வைணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, இரு தரப்பினரையும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு பிணையப் பத்திரம் செலுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் சப் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தென்கலை வைணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சப் கலெக்டரின் உத்தரவால் இரு தரப்பினரும், பிரபந்தம் பாடுவதிலும், வேத பாராயணம் செய்வதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

யார் பெரியவர் என இரு தரப்பினரும் காட்டிக் கொள்வதால் பக்தர்கள் அசவுகர்யத்துக்கு ஆளாவதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி, கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை எனக் கூறி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, வடகலை வைணவர்களுக்கும், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளருக்கும், தேவராஜ ஸ்வாமி கோவில் செயல் அதிகாரிக்கும் உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.