ETV Bharat / state

கட்டட அனுமதி பெறாத சுயநிதி பள்ளிகளுக்கு 2 ஆண்டு அங்கீகாரம்!

சென்னை: தமிழ்நாட்டில் கட்டட அனுமதி பெறாமல் நிதி உதவிப் பெறும் பள்ளிகள், சுயநிதி, மழலையர், தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Directorate of school education
பள்ளிக் கல்வித்துறை இயக்ககம்
author img

By

Published : Aug 5, 2020, 10:29 PM IST

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்டத்தின்படி. 2011 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு கட்டப்படும் அனைத்து வகையான கட்டடங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குவதற்கு முன்னர், நகர் மற்றும் ஊரமைப்பு துறை இயக்குநரின் அனுமதி பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் கட்டட வரைபட அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கும் பள்ளிகளுக்கு, கட்டட வரன்முறைக்கு விண்ணப்பம் செய்ய 2020, மே 31ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து பள்ளியை நடத்தி வருவது சட்டத்தை மீறிய செயலாகும். மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பள்ளிகள் உரிய அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்.

கட்டட வரன்முறைப்படுத்தாத பள்ளிகள் அவ்வப்போது, அரசால் வெளியிடப்படும் வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஏதுவாகவும், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அரசால் வெளியிடப்படும் கட்டட வரன்முறை சார்ந்த சிறப்பு திட்டங்களை பயன்படுத்தி, தங்களது கட்டடத்தை முறைப்படுத்த கட்டாயமாக விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும்.

இதற்குமேல் வாய்ப்பு ஏதும் வழங்க இயலாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில், 2020 ஜூன் 1ஆம் தேதி முதல் 2022 மே 31ஆம் தேதி வரை இரண்டு ஆண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' - பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.