ETV Bharat / state

தனியார் நிறுவன கார் ஓட்டுநர் தற்கொலை சம்பவம் - மனித உரிமை ஆணையம், அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : May 26, 2021, 8:56 PM IST

சென்னை: தனியார் நிறுவன வாடகை கார் ஓட்டுநர் தற்கொலை சம்பவத்தில், தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து காவல் துறையினர் தொடர்ந்த வழக்கில் மனித உரிமை ஆணையமும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவன கார் ஓட்டுநர் தற்கொலைச் சம்பவம் - மனித உரிமை ஆணையம், அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை போரூர் டி.எல்.எஃப்.-பில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வாடகை கார் ஓட்டி வந்தவர், ராஜேஷ். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருமங்கலத்தில் இருந்து அந்நிறுவனத்தின் ஊழியர்களை அழைத்து வருவதற்காக காலை 8 மணியளவில் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி உள்ளார். அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் இருவர், ராஜேஷை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன்னதாக, தனது தற்கொலைக்கு இரு போக்குவரத்து காவலர்களே காரணமென செல்போனில் வீடியோ பதிவு செய்துவைத்துள்ளார்.

இதுதொடர்பாக வார இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதற்கிடையில் ராஜேஷின் சகோதரர் ராம்குமாரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணைக்குப் பிறகு, சம்பவ இடத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் தங்கம் (பணி நிறைவு), தலைமைக் காவலர் பெருமாள் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த ராஜேஷின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது.

உத்தரவை எதிர்த்து வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தங்கம், தற்போது பணியிலிருக்கும் பெருமாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அவர்கள் அந்த மனுவில், "சம்பவத்தன்று காலை திருமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகன விபத்து நடந்ததாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ராஜேஷ் பதிவு செய்த வீடியோவில் கூட போக்குவரத்து காவலர்கள் என்று தான் கூறியுள்ளாரே தவிர, யாரையும் குறிப்பிடவில்லை" என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை ஆணையம் விசாரித்தபோது, ராஜேஷின் காரில் இருந்த தனியார் நிறுவனப் பெண் ஊழியரிடம் விசாரிக்கவில்லை என்றும், தாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை, அதனால் தற்கொலை ஏதும் நிகழவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனித உரிமை ஆணைய உத்தரவை ரத்து செய்யவும், இந்த வழக்கு முடியும் வரை அந்த உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சரவணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இருவரின் வழக்கு குறித்தும் மூன்று வாரத்திற்குள் மாநில மனித உரிமை ஆணையம், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மேகதாது அணை: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது' - துரைமுருகன் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.