சென்னை: தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றுவந்த 17 வயது மாணவி, நேற்று (பிப்ரவரி 4) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி முன்னதாகவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
![private College student commits suicide chennai private College student commits suicide private College student commits suicide by hanging in Arumbakkam chennai arumbakkam college student suicide college student suicide கல்லூரி மாணவி தற்கொலை சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை மாணவி தூக்கிட்டு தற்கொல்லை சென்னை அரும்பாக்கத்தில் மாணவி தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14381371_suicide.jpg)
மேலும் இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து மாணவியின் தற்கொலை கடிதம் ஏதும் இல்லாததால், தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என மாணவியின் குடும்பத்தார், கல்லூரி நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.