தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் கரோனா தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தாலும், சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று அவர் திடீரென்று நெஞ்சு படபடப்பாக இருப்பதாக சக அலுவலர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை சக அலுவலர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், இன்று சிகிச்சைப் பலனின்றி, ரவிச்சந்திரன் உயிரிழந்தார். குறிப்பாக அவருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில், தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் 254ஆக குறைந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்