ETV Bharat / state

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி - பிரதமர் மோடி சென்னை வருகை 28500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். அப்போது ரூ.28,500 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமர் மோடி சென்னை வருகை; 31,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்  நாட்டுகிறார்

author img

By

Published : May 25, 2022, 9:43 AM IST

சென்னை: ஐதராபாதில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்வி நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு-2022 விழாவில் சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர் மாலை 5:45 மணியளவில் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சென்னையில் ரூ.2,900 கோடி மதிப்பிலான 5 திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதில் 75 கி.மீ தொலைவுள்ள ரூ. 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான (அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம்) ரயில் தடம் அமைக்கும் திட்டம். இதேபோன்று சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ. 590 கோடி மதிப்பில் 3-வது ரயில் பாதை அமைக்கும் திட்டம். இதன் மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரித்து, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

மேலும் சுமார் ரூ. 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு பிரிவான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் இந்த நிகழ்ச்சியில் துவக்கிவைக்கப்படுகின்றன, ரூ.28,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதில் 262 கிலோமீட்டர் தூர பெங்களூரு சென்னை விரைவுச்சாலை ரூ. 14,870 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது.

கர்நாடகா-ஆந்திரா-தமிழ்நாடு வழியாகச் செல்லும் இந்தச்சாலை பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை 2 முதல் 3 மணி நேரம் குறைக்கும். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் (என்எச்-4), 21 கி.மீ. தூர ஈரடுக்கு, நான்கு வழி உயர்மட்டச்சாலை, ரூ.5850 கோடி செலவில் கட்டப்படும். இது சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் சென்றுவர உதவும்.

நெரலூரு-தர்மபுரி பிரிவில் (என்எச்-844) 94 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் (என்எச்-227) 31 கி.மீ. இருவழிச்சாலை ஆகியவை முறையே ரூ.3870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இது அந்தந்தப் பகுதிகளில் தடையற்ற போக்குவரத்திற்கு உதவும்.

சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டம் ரூ. 1800 கோடி செலவில் முடிக்கப்படும். இந்த ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் மூலம் பயணிகளுக்கான வசதி மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.1400 கோடி மதிப்பில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள பன் மாதிரி போக்குவரத்துப் பூங்கா போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதையும் படிங்க: STEM பட்டப்படிப்புகளுக்கு 100 மாணவர்களுக்கு அனுமதி- க்வாட் உச்சி மாநாட்டில் தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.