ETV Bharat / state

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் - மாநில தேர்தல் ஆணையர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்
மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்
author img

By

Published : Feb 18, 2022, 10:00 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 19) நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட காவலர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இரண்டு கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் அறையிலும், வெளியிலும் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மூன்று ஆணையர்கள், ஏடிஜிபி-களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்குத் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

697 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 75 விழுக்காடு வாக்குகள் ஒரு நபருக்குச் சென்றிருந்தாலோ, மையம் கைப்பற்றும் நடவடிக்கைகள் இருந்த மையங்களோ பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட சிறப்பு பார்வையாளராக நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாலை 5 முதல் 6 மணிவரை கரோனா நோயாளிகள் பரிசோதனை சான்றிதழைக் காண்பித்து வாக்களிக்கலாம். கோவையில் இரண்டாயிரத்து 700 காவலர்கள், அதிவிரைவுப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

நாளை வாக்குப்பதிவு முடிந்த பிறகு அது தொடர்பான அறிக்கை மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படும். இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

11 கோடியே 89 லட்சம் ரூபாய் இதுவரை பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. எட்டு கோடியே 21 லட்சம் ரூபாய் பணமாகவும், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், இரண்டு கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நோட்டா பயன்படுத்த சட்டவிதிகள் இல்லை. மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் இயந்திரங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அடுத்த தேர்தலுக்குள் இது தயார் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொகைக் கணக்கில் சேரும்வரை ரசீது கொடுக்கக் கூடாது! - அறநிலையத் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.