ETV Bharat / state

'அஞ்சல் வாக்குப்பதிவு செய்ய கால அவகாசம் தேவை' - விஷால்

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலின் தபால் வாக்குப்பதிவை சரியாக நடத்தவேண்டுமென சுவாமி சங்கரதாஸ் அணியும், பாண்டவர் அணியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

actor
author img

By

Published : Jun 22, 2019, 11:42 PM IST

நடிகர் சங்கத் தேர்தல் நாளைக் (ஜூன் 23) காலை புனித எப்பாஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெறவுள்ள நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் உதயா, தேர்தல் அலுவலர் பத்மநாபனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில், இன்னும் தபால் ஓட்டுகள் பல்வேறு இடங்களில் சென்றடையவில்லை. எனவே முறையான , நியாமான தேர்தல் நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் பாண்டவர் அணியினரும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்தனர். அவர்களும் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இதுவரை தபால் வாக்குப் பதிவு செய்யும் வாக்குச்சீட்டு இதுவரை சென்றடையவில்லை. தபால் மூலம் அவர்களது வாக்குகளைப் பதிவு செய்ய கடைசி நாள் இன்று (ஜூன் 22) என்பதால் இன்னும் ஒரு நாள் கால அவகாசம் நீட்டிக்கும்படி பாண்டவர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Intro:சென்னை தி.நகர் நடிகர் சங்கம் அலுவலகத்தில் சுவாமி சங்கரதாஸ் அணி துணை தலைவர் வேட்பாளர் உதயா தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபன் அவர்களை சந்தித்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தபால் ஓட்டுகள் இன்னும் சென்றடையவில்லை தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனிடம் கோரிக்கை மனு அளித்தனர் பின்னர்

Body:செய்தியாளர்களை சந்தித்த உதயா பேட்டி

இன்னும் தபால் ஓட்டுகள் பல்வேறு இடங்களில் சென்றடையவில்லை
தேர்தல் 23ஆம் தேதி நடைபெறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் , கட்டாயம் வெற்றி பெறுவோம்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு தபால் ஒட்டு சென்று சேரவில்லை. எனவே முறையான , நியாமான தேர்தல் நடைபெற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.Conclusion:மேலும் நடிகர் ஆரி பேட்டி ( சங்கரதாஸ் அணி ஆதரவாளர் )

கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி , ஒய் எம் சி வளாகம் , நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைக்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.