ETV Bharat / state

தபால் துறை தேர்வு இனி தமிழில்!

சென்னை: இனிவரும் காலங்களில் தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தபால் துறை தேர்வு தமிழில்!
author img

By

Published : Jul 29, 2019, 5:32 PM IST

தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது, தபால் துறை தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வு தமிழ்நாட்டில் இனி தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் எழுதலாம் என மே 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு எழுத வேண்டும் என ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது எனவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Intro:nullBody:இனிவரும் காலங்களில் தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, தபால் துறை தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தபால் துறை தேர்வு தமிழிழும் நடத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என ஜூலை 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என மே 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

மத்திய அரசின் முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.