ETV Bharat / state

'கண்ணா ரெண்டு லட்டு பாக்க ஆசையா'; மணிரத்னத்தின் PS2 வெளியாக இருக்கும் நிலையில் மீண்டும் திரைக்கு வரும் PS1 - director manirathnam

இந்த மாத இறுதியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரவிருக்கும் நிலையில் மீண்டும் திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் பார்ட் 1 வெளியிடப்படுகிறது.

மணிரத்னத்தின் PS2 வெளியாக இருக்கும் நிலையில் மீண்டும் திரைக்கு வரும் PS1...

author img

By

Published : Apr 6, 2023, 10:25 PM IST

சென்னை: அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை முயற்சித்தும் முடியாமல் போனது. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னம் மிகுந்த பொருட்செலவில் சமீபத்தில் இயக்கிய படம் பொன்னியின் செல்வன்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் ரூ.500 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதல் பாகம் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு அதுவும் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. அண்மையில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் வரும் 21ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் மணிரத்னத்திடம் கேட்டுள்ளார். அவர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து மணிரத்னம் அனுப்பிய மெசேஜை பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’சோழர்கள் மீண்டும் வருகிறார்கள்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. முதல் பாகம் கொடுத்த வெற்றியால் மணிரத்னம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதனால் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது பணியை நிறைவாக செய்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆதித்த கரிகாலனான விக்ரமின் கதையும் இப்பாகத்தில் வர உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ட்ரெய்லரிலும் இருவரது காட்சிகள் அருமையாக இருந்தன. எனவே, படத்தில் இன்னும் நிறைய சுவாரஸ்யமான காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்த நிறைந்திருக்கும் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 'உங்களை பாக்கணும்னு தோணுச்சு'-VJS-யிடம் கியூட்டாக பேசிய குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.