சென்னை விநாயகபுரம் பகுதியிலுள்ள பிருந்தாவன் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இரண்டு தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என மத வேறுபாடின்றி பெண்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினர்.
தொடர்ந்து விழாவில் பெண்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி, தப்பாட்டம் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பல்வேறு கிராமிய கலைகள் நடைபெற்ற நிலையில், தாவணி அணிந்த பெண்கள் சிலம்பத்தை சுற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து சிறுவர்களின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றன. மேலும், பொங்கல் விழாவில் டெங்கு கொசு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: சமத்துவ பொங்கல் - அசத்திய கல்லூரி மாணவிகள்!