ETV Bharat / state

'புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை' - நாராயணசாமி! - புதுச்சேரி முதலமைச்சர் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: பொதுமக்கள் கடற்கரை சாலை, விடுதி ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்குத் தடையில்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி
முதலமைச்சர் நாராயணசாமி
author img

By

Published : Dec 22, 2020, 4:34 PM IST

புதுச்சேரியில் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள், காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அனுமதி:

இந்தக் கூட்டத்தில், கரோனா கட்டுப்படுத்துவது குறித்தும் பண்டிகை காலங்களை மக்கள் கொண்டாடுவதற்கான அனுமதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “கரோனா பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலமைச்சர் நாராயணசாமி

முதற்கட்டமாக யாருக்குத் தடுப்பூசி போடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவர் புய‌ல், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்க ஆலோசனை செய்யப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை:

தொடர்ந்து சனிப்பெயர்ச்சி விழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வர உ‌ள்ளது. தற்போது திருநள்ளார் கோயிலில் விதி முறைகளை பின்பற்றி பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம்போல நடைபெறும். அதற்கும் எந்த வித தடையும் கிடையாது. புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத் தடை இல்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொண்டாடலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.