சென்னையில் தமிழ்கூடல் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவு கருத்து கேட்பு கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கும், அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் தேசிய கல்விக் கொள்கை வரைவை உருவாக்கி பொதுமக்களின் விவாதத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஒரு மொழி வந்தால் மற்றொரு மொழி அழிந்துவிடும் என நினைத்து அதை புறக்கணிப்பது தவறானது. தமிழ்நாடு அரசிடம் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்வி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு மொழிக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.