ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது..? அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி.. - chennai news

One year of vengavayal issue: தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய வேங்கைவயல் சம்பவம் சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெறும் சூழலில் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

one year of vengavayal issue
வேங்கைவயல் விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 9:24 PM IST

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தெரிய வந்தது. இந்த செயல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து, வெள்ளனுர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர், இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறியக் காலதாமதம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 221 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து, பத்து நபர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் சூழலில் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் @mkstalin அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின்…

    — K.Annamalai (@annamalai_k) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது. இத்தனை ஆண்டுகள் முதலமைச்சர் போட்டு வைத்திருந்த சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே திமுக பார்க்கிறது என்பது வெளிப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.

தமிழகத்தில், 30% பள்ளிகளில், பட்டியல் சமூக மாணவர்களுக்கு எதிராக ஜாதிய வேற்றுமை, தீண்டாமை நிலவுகிறது என்று, நாளிதழ் செய்தி ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் முகத்திற்கு நேராகவே சிரிக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக, மத்திய அரசு பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக ஒதுக்கும் நிதியை எடுத்து, உங்கள் வாக்கு அரசியலுக்காக வேறு திட்டங்களுக்குச் செலவிட்டீர்கள் அல்லது செலவே செய்யாமல் திருப்பி அனுப்பினீர்கள்.

பொதுமக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. காலகாலமாக நீங்கள் நடித்து வரும் மேடை நாடகங்களை நம்பியிருந்தார்கள். ஆனால், இனியும் அவர்கள் ஏமாறத் தயாராக இல்லை" என்று தனது X வலை தளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு:
    குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. குற்றவியல்…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல, பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது.

குற்றவியல் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம். ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் கூட வேங்கைவயல் கொடூரத்திற்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இந்த சிக்கலில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

இவ்வளவுக்குப் பிறகும், குற்றவாளிகளைக் கைது செய்வதில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் என்ன தயக்கம்? என்று தெரியவில்லை. வேங்கைவயல் கொடுமை குறித்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையிடமிருந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பிறகும் கூட, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலும் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையோ? என்ற ஐயத்தைத் தான் இந்த நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன" என்று தனது X வலைத்தளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மழை பாதிப்பு: மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.