ETV Bharat / state

மக்களை காக்கும் காவல் துறையினருக்கு கிடைத்த பரிசு ‘கரோனா’! - காவல் துறையினரை தாக்கிய கரோனா

சென்னை: பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட காவல் துறையினருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மக்களை காக்கும் காவல் துறையினருக்கு கிடைத்த பரிசு ‘கரோனா’

author img

By

Published : May 6, 2020, 11:05 AM IST

Updated : May 6, 2020, 12:18 PM IST

சென்னை அண்ணா நகரில் பணிபுரிந்து வந்த ஐபிஎஸ் அலுவலரான துணை ஆணையருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருடன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 2 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அச்சு பணியாளராக பணிபுரிந்து வந்த காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரது துறையில் பணியாற்றிய இருவருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருப்பது தெரியவந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நிலை பயிற்சி பெண் காவலர் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை வில்லிவாக்கம், ஐஸ் ஹவுஸ் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த பெண் காவல் துறையினர். இவர்கள் இரண்டாம் நிலை காவல் துறையினருக்காக தேர்ச்சி பெற்று கடந்த மாதம் மே 3ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், ஸ்டான்லி மருத்துவமனையில் காவல் துறையினருக்கான கரோனா பரிசோதனை மையத்தில் சோதனை செய்துள்ளனர்.

பின்னர் இன்று இவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மவுண்ட் பயிற்சி பள்ளியில் இருந்த இரண்டு பெண் காவலர்களையும் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இவருடன் தங்கியிருந்த குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி உள்ளனர். மேலும் ஐஸ் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் இவர் தங்கியிருந்த பிளாக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 இரண்டாம் நிலை பயிற்சி பெண் காவல் துறையினருக்கு கரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வந்த ஒருவருக்கு கடந்த மாதம் மே 3ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். இந்நிலையில் வில்லிவாக்கத்தில் வசித்துவரும் இவரது 77 வயது தாய்க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.

மேலும் கிண்டி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கும், அமைந்தகரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் 47 வயது நபர் ஒருவருக்கும் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சீல் வைத்த பத்து தெருக்களும் 28 நாள்களுக்குப் பிறகு திறப்பு!

Last Updated : May 6, 2020, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.