ETV Bharat / state

திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்ட காவலர்கள் இடமாற்றம் - காவலர்கள் இடமாற்றம்

திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கிய காவலர்கள் 6 பேரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்ட காவலர்கள் இடமாற்றம்

author img

By

Published : Apr 1, 2022, 8:45 PM IST

சென்னை: அசோக் நகர் முதல் அவென்யூவில் நேற்றிரவு இரு திருநங்கைகள் சில நபர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இரவுப்பணியில் இருந்த துணை ஆணையர், அதைப் பார்த்துவிட்டு உடனடியாக விசாரணை நடத்த ரோந்து காவலருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

திருநங்கைகளுடன் தகராறு: தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர்கள், குமரன் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சசிகுமார், கே.கே நகர் காவலர் பாண்டி, முருகன், மணிகண்டன், மாரிமுத்து மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. இவர்கள் திருநங்கைகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. திருநங்கைகள் பணம் கேட்டு காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டபோது, வாக்குவாதம் முற்றி காவலர்கள் திருநங்கைகளைத் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் திருநங்கைகள் தன்னைத் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காவல் உயரதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி, திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்ட காவலர்களான சசிகுமார், பாண்டி, முருகன், மணிகண்டன், மாரிமுத்து, நாராயணன் ஆகிய 6 பேரைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து, இணை ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சிறுவன் வேன் மோதி உயிரிழந்த விவகாரம் - பள்ளி நிர்வாகத்திற்கு காவல் துறை நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.