ETV Bharat / state

மோசடி புகார்... முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியிடம் காவல்துறை விசாரணை! - fraud case

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 92 லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியும், அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளருமான நல்லதம்பியிடம் வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து
author img

By

Published : Apr 26, 2019, 8:50 AM IST

கடந்த 2012 - 2015ஆம் ஆண்டுகளில் அரசு வேலை வாங்கி தருவதாக 92 லட்சம் பணம் வாங்கி தனியார் கல்லூரி, பள்ளி ஆசிரியர்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் நல்லதம்பி மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பாராஸ் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த நல்லதம்பியின் அறைக்கு வந்து பணம் கொடுத்த ஆசிரியர்கள் அருணகிரி, வசந்த குமார், சிவக்குமார், கண்ணன், சாமிக்கன்னு ஆகியோர் கடந்த 24ஆம் தேதி இரவு நல்லதம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நேற்று (வியாகிழக்கிழமை) வேப்பேரி காவல் நிலையத்தில் நல்லதம்பி புகார் அளித்தார். இதனையடுத்து,

நல்லதம்பி தங்கி இருந்த விடுதி

இருதரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இருதரப்பினரையும் காவல்துறை சமாதானமாக திருப்பினர்.

வேலை வாங்கி வருவதாக சொல்லி ஏமாற்றிய முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பியிடம் போலீசார் விசாரணை!

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியும், அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளருமான நல்லாதம்பியிடம் வேப்பெரி காவல் துறையினர் விசாரணை.

கடந்த 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அரசு வேலை வாங்கி தருவதாக 92 லட்சம் பணம் வாங்கி தனியார் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களை ஏமாற்றியுள்ளதாக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பாராஸ் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த நல்லதம்பியின் அறைக்கு வந்த பணம் கொடுத்த ஆசிரியர்கள் அருணகிரி, வசந்த குமார், சிவக்குமார், கண்ணன் மற்றும் சாமிக்கன்னு ஆகியோர் நேற்று இரவு நல்லதம்பியை கொலை மிரட்டல் விடுத்ததாக இன்று வேப்பேரி காவல் நிலையத்தில் நல்லதம்பி புகார் கொடுத்தார். 

இருதரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இருதரப்பினரும் சமாதானமாக சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.