சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் அபிஷேக் ராஜன்(24). இவர், தனது வீடு அருகே நிறுத்திவைத்திருந்த ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகனத்தை, அடையாளம் தெரியாத நபர்கள் திருடியதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அபிஷேக்கின் வீடு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.