ETV Bharat / state

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்: சக நடிகர்களிடம் விசாரணை - பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மரணம்

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து சக நடிகைகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக நாசரத்பேட்டை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

police hold inquiry with acters regarding death of actress Chitra

author img

By

Published : Dec 10, 2020, 11:52 AM IST

சென்னை: பிரபல தனியார் தொலைகாட்சி நெடும் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவந்த சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மட்டுமின்றி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.

police hold inquiry with acters regarding death of actress Chitra
ஷாலு ஷம்மு பதிவு

சித்ராவின் தந்தை தனது மகளின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், சினிமா நடிகை ஷாலு ஷம்மு நேற்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் உங்கள் வாழ்க்கை துணை பற்றிய விவகாரத்தில் எந்தத் தவறான முடிவும் எடுக்க வேண்டாம் எனப் பலமுறை அறிவுறுத்தியும் நீங்கள் முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையில் இல்லை எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் மற்றொரு பதிவு தனது காதலர் கெட்டவர் எனத் தெரிந்த பிறகும் எவ்வாறு கண்மூடித்தனமாக அவரை நம்புகிறீர்கள் எனக்கூறி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக்கொண்ட காணொலி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இவரது இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாசரத்பேட்டை காவல் துறையினர் மறைந்த நடிகை சித்ராவுடன் பணியாற்றும் சக நடிகர்கள், நெருங்கிய நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.