சென்னை: கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் நேற்று முன்தினம் ரூட் தல பிரச்சனையில் மாணவர்கள் சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தவுடன் மாணவர்கள் சிதறி ஓடியுள்ளனர். போலீசாரிடம் 6 மாணவர்கள் சிக்கினர்.
பின்னர் மாணவர்கள் விட்டு சென்ற பையை சோதனையிட்ட போது 8 பட்டாக்கத்திகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பச்சையப்பன் கல்லூரி திருத்தணி ரூட் தல மாணவர்களுக்கும், பூந்தமல்லி ரூட் தல மாணவர்களுக்கும் மோதல் நடந்தது தெரியவந்தது. கெத்துக்காட்ட திருத்தணி ரூட் தல மாணவர்கள் கத்தி மற்றும் மதுபாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி ரூட் தல பிரேம் குமார் மற்றும் திருத்தணி ரயில் ரூட் தல கல்லூரி மாணவர் கிஷோர் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும் 6 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூட் தல பிரச்னை: ஓடும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் அடிதடி!