சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2 ஆவது தெருவில் வசித்து வருபவர் நாராயணன்(69). என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சந்திரமோகன் (55) என்பவரது வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சந்திரமோகன் மகன் சதீஷ் (35), நாராயணனிடம் வீட்டு வாடகை கேட்டுள்ளார்.
அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏறட்டுள்ளது. இதனால் கோபத்துடன் வீட்டுக்குள் சென்ற நாராயணன், கத்தியை எடுத்து வந்து சந்திரமோகன், அவரது மகன் சதீஷ் , சதீஷ் மனைவி சுகன்யா(28) ஆகியோரை குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சுகன்யா உயிரிழந்தார். மேலும், சந்திரமோகன், அவரது மகன் சதீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூளைமேடு காவல் துறையினர், நாராயணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறு: தாயை மகனே கத்தியால் குத்திய அவலம்!