ETV Bharat / state

'மதயானைக் கூட்டம் ஓவியா ராகிங் காட்சி' போல் வாகன ஓட்டிகளுக்கு தண்டனை! - police give punishment

சென்னை: மதயானைக் கூட்டம் என்ற திரைப்படத்தில் நடிகை ஓவியாவை ராகிங் செய்யும் மாணவிகள் வழங்கிய தண்டனையைப் போல் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

காவல் துறையினர் நூதன தண்டனை  அம்பத்தூர் காவல் துறையினர்  அம்பத்தூர் செய்திகள்  சென்னை செய்திகள்  police give punishment  violating curfew
ஓவியாவுக்கு வழங்கிய தண்டனை போல் வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை
author img

By

Published : May 1, 2020, 11:39 AM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு நூதன தண்டனைகளை காவல் துறையினர் வழங்கிவருகின்றனர்.

அதன்படி, அம்பத்தூர் பகுதியில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் தங்களது தவறை உணரும்வகையில், தகுந்த இடைவெளியுடன் நிற்கவைத்த அம்பத்தூர் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன், வாகன ஓட்டிகளை, 'இனிமேல் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன்' எனக் கூறியவாறு இரு கைகளால் தங்களைத் தாங்களே அறைந்துகொள்ளுமாறு நூதன தண்டனை வழங்கியுள்ளார்.

ஓவியாவுக்கு வழங்கிய தண்டனை போல் வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை

இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள், 'இனிமே வீட்டை விட்டு வருவியா! வருவியா!' எனக் கூறியவாறு தங்களைத் தாங்களே அறைந்துகொண்டனர்.

மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் ஓவியாவை ராகிங்செய்யும் மாணவிகள் வழங்கிய தண்டனைப் போல் காவல் துறையினர் ஊரடங்கை மீறியவர்களுக்கு வழங்கியுள்ள இந்த நூதன தண்டனையை பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன எல்லாரும் பின்னால போறாங்க... நூதன தண்டனை வழங்கிய காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.