ETV Bharat / state

95 விழுக்காடு காவலர்களுக்கு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது - சங்கர் ஜிவால் - Police commissioner Shankar jiwal speech at cm police medal distribution function

95 விழுக்காடு காவலர்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை போடப்பட்டுள்ளதாகச் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Shankar jiwal
சங்கர் ஜிவால்
author img

By

Published : Jul 16, 2021, 7:03 AM IST

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு "தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள்" வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பாக பணிபுரிந்த ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், குற்றப் பிரிவு காவல்துறையினர், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், சென்னை மத்தியக்குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை நுண்ணறிவுப்பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவு, முதலமைச்சர் பாதுகாப்புப் பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, விபச்சாரத் தடுப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம், சிறுவர் நல காவல் பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை, தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய காவல் பிரிவுகளில் பத்து ஆண்டுகள் துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் சிறப்பாக பணியாற்றிய ஆண், பெண் உள்ளிட்ட 642 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

95 விழுக்காடு காவலர்களுக்கு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது

அவர்களில் 591 காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று (ஜூலை 15) பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் செந்தில் குமார், போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், "10 ஆண்டு காலமாக எந்தத் தவறும் இழைக்காத காவலர்களுக்கு இன்று பதக்கம் வழங்கப்பட்டது. இதே போன்று அனைத்து காவலர்களும் பணிபுரிய வேண்டும்.

காவல்துறையில் உயரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நிலை காவலர்களும் ஒன்றிணைந்து உழைத்தால் தான் காவல்துறைக்கு இன்னும் சிறப்பு பெயர் கிடைக்கும். கரோனா சூழ்நிலையில் காவலர்கள் உடல்நலம் மட்டுமில்லாமல் மன உறுதியோடு பணியாற்ற வேண்டும்.

95 விழுக்காடு காவலர்களுக்கு காவலர்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை போடப்பட்டுள்ளது. அதில், 52 விழுக்காடு பேர் 2ஆவது டோஸ் போட்டுள்ளனர். சென்னை மாநகரின் அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.