சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் சென்னை காவல்துறை அலுவலர்களுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மத்திய குற்றபிரிவு, நுண்ணறிவு பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு உள்பட பல காவல்துறை பிரிவுகளில் பணிப்புரியக்கூடிய காவல் ஆய்வாளர்கள் முதல் உயரலுவலர்கள் வரை சுமார் 536 காவல்துறையினர் பங்கேற்றனர்.
இதில், 20 காவலர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். தேர்வான காவல் துறையினருக்கு இன்று இறுதி போட்டியானது நடைபெற்றது.
இந்த போட்டியில் தலைமை கூடுதல் ஆணையர் அமல்ராஜ், கிண்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் எஸ். லஷ்மி ஆகியோர் முதலிடத்தையும், இரண்டாமிடம் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலும், மூன்றாமிடம் கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் பிடித்து பரிசுகளை வென்றனர்.
இந்த போட்டியை ஒருங்கிணைத்து நடத்திய ஏடிஜிபி ஏ.கே. விஸ்வநாதனுக்கு காவல்துறையினர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.