கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதனைத் தொடந்து சென்னை காவல் துறையினர் நந்தனம் சிக்னல் அண்ணா சாலையில் விழிப்புணர்வு ஓவியம் ஒன்றை பிரமாண்டமாக வரைந்துள்ளனர்.
அதில் கரோனா வைரஸ், பெண் ஒருவரை தாக்க முயற்சிக்கும்போது அதனை காவலர் தனது குச்சியால் அடித்து விரட்டுவது போல சித்தரிக்கப்பட்டு வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தை அப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்வோர் நின்று பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று காவல் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவர் மீது எச்சில் துப்பிய கரோனா நோயாளி!