ETV Bharat / state

மனநலம் பாதித்த நபர்... குளிப்பாட்டிய காவலர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்! - Traffic policemen who cleaned up the mentally ill person and added them to the archive

சென்னை: போரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரைச் சுத்தம் செய்து காப்பகத்தில் சேர்த்த போக்குவரத்து காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெகிழ்ச்சி சம்பவம்
author img

By

Published : Nov 13, 2019, 8:01 AM IST

சென்னை போரூர் அருகே மதனந்தபுரம் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் ரமேஷ், ஜேம்ஸ் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அழுக்கான உடையில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சாலையை முறையாகக் கடப்பதும், போக்குவரத்தைச் சரி செய்வதுமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த போக்குவரத்து காவலர்கள், அவரிடம் விசாரித்த போது முறையான பதில் கூறவில்லை.

இதனையடுத்து அருகிலுள்ள முடிவெட்டும் கடைக்கு அந்த நபரை அழைத்துச் சென்று முகசவரம் செய்து, மொட்டையடித்து, அவரை குளிப்பாட்டி புது உடைகளும் உணவுகளும் வாங்கிக் கொடுத்தனர். பின்னர், அவரிடம் விசாரிக்கையில் தனது பெயர் சசி என்று மட்டும் கூறியுள்ளார்.

மனநலம் பாதித்த நபரை காப்பகத்தில் ஒப்படைத்த காவலர்கள்

பின்னர் சரியான முகவரியில் அவரை ஒப்படைக்கும் வரை தற்காலிகமாகக் காப்பகத்தில் காவலர்கள் ஒப்படைத்தனர். இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டையும், நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரவுடி ரஜினி கொலையில் முக்கிய திருப்பம்... குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்!

Intro:போரூரில் மன நலம் பாதிக்கப்பட்ட நபரை சுத்தம் செய்து காப்பகத்தில் சேர்த்த போக்குவரத்து போலீஸ்காரர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Body:போரூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் ரமேஷ் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அழுக்கான உடையில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சாலையை முறையாக கடப்பதும் போக்குவரத்தை சரி செய்வதுமாக இருந்தால் இதனை கண்ட போக்குவரத்து போலீஸ்காரர்கள் அந்த நபரிடம் விசாரித்தபோது முறையான பதில் கூறவில்லை இதையடுத்து போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை அருகிலுள்ள முடி வெட்டும் கடைக்கு அழைத்துச் சென்று அழுக்காக இருந்த தலை முடியை வெட்டி மொட்டையடித்து அவரை குளிப்பாட்டி புது உடைகள், உணவு வாங்கிக் கொடுத்து அவரிடம் விசாரித்தபோது அது பெயர் சசி என்று மட்டும் கூறியுள்ளார் Conclusion:அவரின் சரியான முகவரி தெரிந்தவுடன் அவர்களின் உறவினர்களிடம் இந்த நபர் ஒப்படைக்கப்படுவார் எனவும் தொடர்ந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவதாகவும் போலீஸ்காரர்கள் தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டு அழுக்கு உடையுடன் சுற்றி திரிந்த ஒரு நபரை போக்குவரத்து போலீஸ்காரர்கள் சுத்தம் செய்து காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் போக்குவரத்து காவலர்களின் இந்த செயல் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.