கரோனா பொதுமுடக்க காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதி மூடப்பட்டிருந்த நிலையில், உணவிற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்வாகம் கூறியதை எதிர்த்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அதனைக் கண்டித்து கடந்த 5 நாள்களாக போராட்டம் நடத்திய ஐந்து மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், ”மாணவர்களை இடைநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (மார்ச்.22) போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இப்போராட்டத்தின்போது காவலர்கள் அத்துமீறி மாணவ, மாணவிகளைத் தாக்கியதில் அவர்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த ஆணின் உறுப்பை துண்டித்த பெண்!