சென்னையில் ரவுடிகள் நடவடிக்கையை கண்காணித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
ரவுடிகள் கைது
அதன் பேரில் வடசென்னையின் முக்கிய ரவுடிகள் பட்டியலில் இருந்த கல்வெட்டு ரவி, காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்டோரை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில், தண்டையார் பேட்டை நாவலூர் குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி நெப்போலியன் (41) என்பவர் தலைமறைவானர். இவர் மீது நான்கு கொலை வழக்கு, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முக்கிய ரவுடிக்கு வலை
கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த நெப்போலியன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை அமைத்த காவல் துறையினர், கிழக்கு கடற்கரை சாலையில் பதுங்கியிருந்த நெப்போலியனை கைது செய்தனர்.
கூட்டாளி கைது
மேலும், அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், நெப்போலியனை காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், அவரது கூட்டாளியான திருவள்ளூர் பேராணம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவுடி சரத்குமார் (28) என்பவரையும் கைது செய்து பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: அதன் பின்னணி என்ன?