ETV Bharat / state

BP-யால் கார் விபத்து; 7 பேர் படுகாயம்.. முதியவரை கைது செய்த போலீஸ்!

கீழ்ப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ், ஆட்டோ, பைக் என அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். காரை ஓட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Police arrested elderly man driving a car that lost control and rammed into a series of vehicles in Chennai
சென்னையில் கட்டுப்பாடை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிவந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்
author img

By

Published : Mar 28, 2023, 1:58 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் அந்த கார் அவ்வழியே சென்ற ஆட்டோ, இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதுடன் சாலையில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளான ராஜி, ஹேமலதா, பாபு, பிரதாப், கனகராஜ், செந்தில்கணேஷ், யோகேஷ் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாமஸ் (75) என்பது தெரியவந்தது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தாமஸ் மாதந்தோறும் மைலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து வருவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் வழியில் திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் காரை ஓட்டமுடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார் ஒட்டுநர் தாமஸ்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பர்கள் முன்பு அடித்ததால் ஆத்திரம்.. பெரம்பூர் அதிமுக நிர்வாகி படுகொலையில் திடீர் திருப்பம்.. சிறுவன் உட்பட 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.